இணையவழியில் கடவுச்சீட்டு!!

pass

50 பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட 55 நிறுவனங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து, உரிய  பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளத்தை வழங்கி, மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என  குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மற்றும் வவுனியா, கண்டி, மாத்தறை, குருநாகல் பிரதேச காரியாலயங்களில் மூன்று நாட்களுக்குள் விரைவு சேவையின் ஊடாக கடவுச்சூட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version