வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று, நேற்றைய தினம் மாலை கிரிபத்கொட காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த உடலமானது அழுகிய நிலையில் காணப்படுவதால், இந்த மரணம் சுமார் மூன்று நாள்களுக்கு முன்னரே நிகழ்ந்திருக்கலாம் எனவும் உயிரிழந்த நபர் தொடருந்தில் பயணிக்கும்போது தவறி விழுந்திருக்கலாம் அல்லது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனவும் காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், அங்கு வருகை தந்த தடயவியல் சோதனை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், நீதிவான் விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

