மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

Negombo Prison

 

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த நிலையில் இவர்கள் கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.

நேற்றைய தினம் ஒருவரும் இன்று காலையில் ஒருவரும் உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில், நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.

சிறைக்கலவரங்களில் 21 கைதிகள் உயிரிழந்ததாகவும், இதன்மூலம் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Exit mobile version