ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரடியாகப் பார்வையிடுவதற்கு குறித்த குழுவினரின் சார்பில் நீதிமன்றத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அதற்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த விண்ணப்பத்தினை நேற்று பரிசீலித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
மேலும், நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நாளையதினம் புதன்கிழமை காலை 9 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதிக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிடவுள்ளனர்.

