இணையம் மூலமாக நீதிமன்ற அமைப்புக்கள்

24 6635d8be831e2

இணையம் மூலமாக நீதிமன்ற அமைப்புக்கள்

இணையவழி மூலம் சந்தேகத்துக்குரியவர்களை நீதிமன்றங்களில் தொலைதூரத்தில் இருந்தே முன்னிலைப்படுத்துவதற்கு வசதியாக நடமாடும் நீதிமன்ற அமைப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இதன் முதல் நிகழ்வுகள் இன்று (04.05.2024) தென் மாகாணத்திலுள்ள (Southern Province) மூன்று சிறைச்சாலைகளில் இடம்பெற்றுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் நிதியுதவியுடன் நிறுவப்பட்ட இந்த நடமாடும் நீதிமன்ற அமைப்புகள் அகுனுகொலபெலஸ்ஸ, மாத்தறை (Matara) மற்றும் காலி (Galle) சிறைச்சாலைகளில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள நடமாடும் நீதிமன்றப் பிரிவு, இன்று காலை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version