புறக்கோட்டை மொத்த வியாபார சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை 95 ரூபாவாக உள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 130 ரூபாவாக இருந்தது.
இதேவேளை, கடந்த வாரத்தில் சுமார் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை தற்போது 130 ரூபாவாக குறைந்துள்ளது.
#SriLankaNews
1 Comment