வடமராட்சியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெற்றிலைக்கேணி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் வெற்றிலைக்கேணி கோரியடி கடற்கரையில் வாடியில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் மீது மின்னல் தாக்கி உள்ளது.
இதன்போது போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான (வயது–35) ஜோன் தோமசன் குயின்ரன் சுதர்சன் என இனங்காணப்பட்டுள்ளார்.
மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment