தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு வேளையிலும் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – 14 கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த (வயது–30) இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஊரடங்கு வேளையில் வத்தளை – வனவாசல வீதி – ஜயந்தி விஹாரைக்கு முன்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞனிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி அவரிடமிருந்து ஒரு கிலோ 666 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்படுள்ளதுடன் குறித்த இளைஞரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment