15 9
இலங்கைசெய்திகள்

க.பொ. த. சாதாரண தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Share

க.பொ. த. சாதாரண தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகள் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று (10.12.2024) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகள் இணையவழி (Online)இல் பரீட்சைக்கு விண்ணப்பிக்க கடந்த நவம்பர் மாதம் 05 முதல் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

மேலும், “எந்த காரணத்திற்காகவும் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் விண்ணப்பப் படிவங்களைப் பெற வாய்ப்பில்லை என்பதால், பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் இன்றுக்குள் விண்ணப்பப் படிவங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் பரீட்சைக்கு நீங்கள் நள்ளிரவு 12 மணிக்கு முன் உங்கள் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்..” என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...