யாழ். மாவட்ட தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையில் மின்னியலாளர், தாதிய உதவியாளர், தன்னியக்க பொறியியலாளர் NVQ4 க்கான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
கற்கைநெறி முற்றிலும் இலவசம் என்பதுடன் அத்தோடு மாதாந்த உதவி கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படவுள்ளதுடன் இரண்டு மாத வகுப்பறை பயிற்சியோடு வேலைத்தள பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பங்களை இல 44, சோமசுந்தரம் அவனியு சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையில் வார நாட்களில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment