maithri
அரசியல்இலங்கைசெய்திகள்

முடிவில் மாற்றமில்லை! – சுதந்திரக்கட்சி விடாப்பிடி

Share

அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி விடுத்த அழைப்பையேற்று அமைச்சு பதவிகளை ஏற்காதிருக்கவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்புக்கு முன்னர் சுதந்திரக்கட்சி எம்.பிக்களுக்கிடையில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. அந்த கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தான் உள்ளிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் சபையில் அறிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியை சந்திப்பதால் அக்கட்சியின் முடிவு மாறக்கூடும் என்ற தகவல் வெளியானது. எனினும், மேற்படி முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என சந்திப்பின் பின்னர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அவசரகால சட்டத்தை எதிர்க்க முடிவெடுத்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...