ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் சுதந்திரக்கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது இல்லத்தில் கடந்த திங்கட்கிழமை (15) நடைபெற்ற கட்சியின் அரசியல் சபைக் கூட்டத்திலும், கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் எதிர்கால வியூகம் தொடர்பான கலந்துரையாடலிலும் இவ்விருவரும் கலந்துகொண்டுள்ளனர்.
கட்சி முடிவைமீறி அமைச்சு பதவிகளை பெற்றதால் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திரக்கட்சி அறிவிப்பு விடுத்திருந்தது. ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் மீண்டும் கட்சி செயற்பாடுகளில் களமிறங்கியுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment