புதிய கொவிட் வைரஸ் வகை நாட்டிற்குள் பிரவேசிக்கும் அபாயம் இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் , இதன் மூலம் நாட்டில் கொவிட் பிறழ்வு வகைகள் உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
தென்னாபிரிக்காவில் இனங்காணப்பட்ட கொவிட் வகை மிகவும் ஆபத்தான முறையில் பரவி வருவதாகவும் மக்கள் அவதானமாக செயற்படும்படி அறிவுறுத்தப்ப்டுகின்றனர்.
இந்நிலைமை தொடர்பில் சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவிக்கையில் மக்கள் அதிகம் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும், முறையான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
தற்போது ஐரோப்பா முழுவதிலும் காணப்படுவதால் பல நாடுகள் தமது எல்லைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
இலங்கையும் இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என மருத்துவ சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment