சிகரெட்டுக்கான புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
இதனை சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பாக தேசிய அதிகார சபையினருடன் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிகரெட்டுகளின் சில்லறை விற்பனை, பொது இடங்களில் புகைத்தல் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கடுமையான விடயதானங்கள் புதிய கொள்கையில் கொண்டுவர எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment