20220527 134335 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொதுமக்களின் நலன் கருதி நல்லூர் பிரதேச சபையினால் புதிய திட்டங்கள்

Share

நாட்டின் பொருளாதார மந்த நிலையை கருத்திற்கொண்டு நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி பிரதேச சபையினால் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்தார்.

இன்றையதினம் நல்லூர் பிரதேச சபையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்களை உணவுப் பஞ்சத்தில் இருந்து பாதுகாக்கவும் வறுமை நிலையிலிருந்து தணிப்பதற்கும் பிரதேச சபையின் நிதிப் பங்களிப்புடன் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் இரண்டு வேலைத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.

நல்லூர் பிரதேச சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமைய குறுங்கால வீட்டுத் தோட்டப்பயிர் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக பெறப்படும் பயனாளிகளுக்கு விதைகள், நாற்றுகள் மற்றும் இயற்கைப் பசளை வழங்கப்பட்டு அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

மேலும், சனசமூக நிலையங்களை தயார்படுத்தி உணவுப் பஞ்சம், பற்றாக்குறையில் இருக்கும் குடும்பங்களுக்கு உடனடியாக உணவுப் பொதிகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணி வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி மேம்படுத்தவேண்டும். அவர்களுக்கு எந்த உதவிகளையும் நல்லூர் பிரதேச சபை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளது. எம்முடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் தயாராக உள்ளன – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...

image 1200x800 35 1
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் ஆவணங்கள்: பிரான்ஸ் பிரபலங்கள் மீது பாயும் விசாரணை! – சிறப்புப் புலனாய்வுக் குழு அதிரடி நியமனம்!

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளில், பிரான்ஸ் நாட்டின் அரசியல்...

image 1200x800 31 1
செய்திகள்உலகம்

எப்ஸ்டீனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை! – அதிர்ச்சித் தகவல்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் அதிரடி விளக்கம்!

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 35 லட்சம் பக்கங்கள் கொண்ட இரகசியக் கோப்புகளை அமெரிக்க...