ggg 1
இலங்கைசெய்திகள்

அரிசிக்கு புதிய விலைகள்!

Share

அரசாங்கத்தால் அரிசிக்கான விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதை அடுத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் 3 வகை அரிசிகளுக்குமான புதிய விலையை அறிவித்துள்ளது.

இதனை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டரிசி ஒரு கிலோ 115 ரூபாவாகவும் சம்பா அரிசி ஒரு கிலோ 140 ரூபாவாகவும் கீரி சம்பா அரிசி ஒரு கிலோ 165 ரூபாவாவும் விலை குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளிடமிருந்து நாட்டரிசி கிலோ 62.50 ரூபாவுக்கும் சம்பா கிலோ 70 ரூபாவுக்கும் கீரி சம்பா கிலோ 80 ரூபாவுக்கும் பெற்றுக்கொள்ள முடிவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரிசிக்கு விதிக்கப்பட்ட விலைக் கட்டுப்பாட்டை நீக்கி அரிசி தட்டுப்பாட்டை நீக்க ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவையால் நேற்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...