கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை தொடர்பில் அறிவிப்பு!
இலங்கைசெய்திகள்

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை தொடர்பில் அறிவிப்பு!

Share

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை தொடர்பில் அறிவிப்பு!

எதிர்வரும் சனிக்கிழமை (15) அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துறை வரையிலான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் பாதையிலான போக்குவரத்து கடந்த ஜனவரி மாதம் வீதி புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது.

இந்திய கடன் உதவியின் கீழ் 62 கிலோ மீற்றர் தூரம் சீர்செய்யப்பட்டு 33 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இந்தப் பாதை மூலம் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில்களுக்கான ஆசன முன்பதிவு சேவையும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...