யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தலைமையகத்தின் 27வது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாபா ஆர்டபிள்யுபி ஆர்எஸ்பி என்டியு சிரேஸ்ட அதிகாரி நேற்று (17) பொறுப்பேற்றார்
அனைத்து மத வழிபாடுகளுடனும், சம்பிதாயப்பூர்வமாக சமய சடங்குகளுடன் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அத்துடன் இராணுவ அணிவகுப்பும், இராணுவ மரியாதைகளும் வழங்கப்பட்டதுடன், மகிழ்ச்சியளிக்கும் முகமாக கட்டளைத் தளபதியினால் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் முன் பகுதியில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.
தொடர்ந்து மரித்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் முகமாக மலர் அஞ்சலியினைச் செலுத்தியதுடன், அனைத்து இராணுவ அதிகாரிகள் முன்னிலையிலும் தனது ஆரம்ப உரையினையும் நிகழ்த்தினார்.
இந் நிகழ்விற்கு படைத் தளபதிகள், முன் பராமரிப்பு பிரதேசம் (வடக்கின்) தளபதி, படைப்பிரிவுத் தளபதிகள் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment