32 2
இலங்கைசெய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தின் எதிரொலி : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Share

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக வெற்றிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெற்றிலை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளமையால் கராச்சிக்கான வெற்றிலை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய, எப்பலதெனிய வெற்றிலை விவசாய நல சங்கத்தின் தலைவர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு அதிகளவான வெற்றிலை ஏற்றுமதி இடம்பெறுகிறது.

வாரத்தில் இரு நாட்களுக்கு விவசாயிகளிடமிருந்து வர்த்தகர்கள் வெற்றிலையைக் கொள்வனவு செய்கின்றனர்.

எனினும், விமான சேவை நிறுத்தப்பட்டமையினால் வெற்றிலைகள் விமான நிலையத்தில் தேங்கியுள்ளதாகவும் எப்பலதெனிய வெற்றிலை விவசாய நல சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்கள் வெற்றிலைகளைக் கொள்வனவு செய்யாமையினால் உள்நாட்டுச் சந்தைக்கு வரும் வெற்றிலையின் அளவு அதிகரிக்கும் எனவும் எதிர்காலத்தில் வெற்றிலையின் விலை குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
12 12
இலங்கைசெய்திகள்

தமிழ்க் கட்சிகளிடம் சுமந்திரன் முன்வைத்துள்ள கோரிக்கை

ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக்கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய...

11 11
இலங்கைசெய்திகள்

சர்வதேச உளவுத்துறையின் உதவியுடன் பாதாள உலகம் தொடர்பில் முக்கிய நடவடிக்கை

நாட்டை விட்டு தப்பிச் சென்ற 10 பிரபல பாதாள உலகத் தலைவர்களை விரைவாகக் கைது செய்வதற்காக...

10 14
இலங்கைசெய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) முக்கிய...

9 14
இலங்கைசெய்திகள்

கொழும்பில் முக்கிய வெசாக் வலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

கங்காராம விகாரை உள்ளிட்ட கொழும்பின் முக்கிய வெசாக் வலயங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்...