Karainagar
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக மயிலன் அப்புத்துரை தெரிவு

Share

காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழுவைச் சார்ந்த மயிலன் அப்புத்துரை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற தவிசாளர் தெருவில் சுயேட்சைக்குழுவைச் சார்ந்த செயற்குழு உறுப்பினர் யோகநாதன் முன்மொழிய தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த விஜயராஜா வழிமொழிந்தார்.

இதனையடுத்து வேறு எந்த முன்மொழிவுகளையும், சமர்ப்பிக்கப்படாத நிலையில் சுயேட்சைகுழுவைச் சேர்ந்த மயிலன் அப்புத்துரை ஏகமனதாக தவிசாளராக தெரிவு செய்யப்படுவதாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அறிவித்தார்.

மேலும் இன்றைய சபை அமர்வில் இன்றைய தவிசாளர் தெரிவில் சுயேட்சைகுழுவைச் சார்ந்த மூன்று உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த மூன்று உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சார்ந்த ஒரு உறுப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த இரண்டு உறுப்பினர்கள் இன்றைய தவிசாளர் தெரிவில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...