செய்திகள்அரசியல்இலங்கை

பொய் சொல்வதற்கு தகுதி வேண்டும்! – த.தே.ம.முன்னணிக்கு சித்தார்த்தன் பதிலடி

IMG 20220128 WA0008
Share

முதலமைச்சர் வேட்பாளர் யார் எனும் போட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் மத்தியில் பொய் சொல்வதற்கு தகுதி வேண்டும். 13வது திருத்தச் சட்டத்தினை நாங்கள் தீர்வாக ஏற்றுக்கொண்டுள்ளோம் என கஜேந்திரகுமார் அணியினர் பொய் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்கள்.

அவ்வாறு பொய் பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் என்ன தீர்வினை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது தீர்வு விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று கூறமுடியுமா? ஏன் அவர்கள் இவ்வாறு செயற்படுகிறார்கள்  என தெரியவில்லை.

அத்தோடு கஜேந்திரகுமார் அணியினர் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார்கள்  யாரை முதலமைச்சராக முட்படுத்துவது என்பது தொடர்பில் கட்சிக்குள் போட்டி நிலை காணப்படுகின்றது.

அவ்வாறான நிலையில் ஏன் இவ்வாறு மக்களை குழப்பும் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள் என நான் கேட்க விரும்புகின்றேன். அவர்களது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் அதாவது தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர்கள் என்ன தீர்வினை முன் வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியுமா?

அவர்களுடைய தீர்வு ஒற்றையாட்சிக்குள் அமைகின்றது எனவே மக்களை இனியும் அவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது மக்களுக்கு நன்கு விளங்கும் இவர்கள் பொய்யுரைக்கின்றார்கள் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...