வடமராட்சியில் இளைஞர் ஒருவர் குத்திப் படுகொலை!

மதுப் போத்தலால் குத்திப் படுகொலை

யாழ்., வடமராட்சியில் குடிபோதையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் மதுப் போத்தலால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வல்லை யாழ். பீச் ஹோட்டலில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குணசேகரம் குணசோதி (வயது 25) என்னும் பருத்தித்துறை, திக்கத்தைச் சேர்ந்தவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version