எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கட்டுப்படுத்தக் கோரியும், சட்டவிரோத தொழில்களை தடுத்து நிறுத்த கோரியும் முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு நகரில் கவனயீர்ப்பு மாபெரும் போராட்டமொன்று இன்று(16) காலை 10.00 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மீனவ சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது,
* தடையின்றி மண்ணெண்ணை வழங்க வேண்டும்.
* மானிய விலையில் மண்ணெண்ணை வழங்க வேண்டும்.
* இந்திய இழுவைப் படகுகளின் வருகையினை தடை செய்ய வேண்டும்.
* 3 மாதத்திற்கான இழப்பீடு வழங்க வேண்டும்.
* சட்டவிரோத மீன்பிடி தொழில்கள் அனைத்தும் தடைசெய்ய வேண்டும்.
* ஒயிலின் விலை குறைக்க வேண்டும் .
முதலான கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெற்றிருந்தது.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம் ) க.கனகேஸ்வரன் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எஸ். குணபாலன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தரும் திருமதி விக்னேஸ்வரன் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.
குறித்த மகஜர் ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
#SriLankaNews
Leave a comment