கோப்பாய் கிறிஸ்டியன் கல்லூரிக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனம் தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து , மோட்டார் சைக்கிளில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தவர்களை அச்சுறுத்தி பின்னர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
#SriLankaNews
Leave a comment