தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கடந்த ஜுன் மாதம் பரபரப்பாக பேசப்பட்ட மூன்று வங்காளப் புலிக்குட்டிகளை பிரசவித்த தாய் புலி உயிரிழந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி அகிரா, டுமா மற்றும் லியோ என்ற குட்டிகளை பிரசவித்த தாய் புலி கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மிருகக்காட்சிசாலையின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடைத் துறை ஊழியர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
“கெல்லா” என்ற பெயருடைய தாய் புலி தனது குட்டிகளை மிகவும் அன்பான பார்த்த தாயாக இருந்ததாகவும். இறக்கும் போது சுமார் 15 வயது. என மிருகக்காட்சிசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள சின்ஜியாங் சஃபாரி பூங்காவில் இருந்து விலங்கு பரிமாற்ற நிகழ்ச்சி மூலம் இலங்கையில் உள்ள தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்டது. உடல் பிரேத பரிசோதனை மற்றும் பிற சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Leave a comment