மொரகொட சர்ச்சை – இந்தியா முற்றுப்புள்ளி!

High Commissioner designate Milinda Moragoda t65767

இந்தியாவுக்கான அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொட  நியமனத்தை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், இது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய தூதுவராலய பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில், நியமனம் தொடர்பில் வெளியான செய்தியில் எதுவித உண்மையும் இல்லை. இலங்கையின் தூதுவராக நியமனம் பெற்று டில்லி சென்ற மிலிந்த மொரகொடவின் நியமன சான்றிதழை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானவை – என தெரிவிக்கப்பட்டுள்ளது,

Exit mobile version