குரங்கு அம்மை (monkeypox) நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய பரிசோதனை ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கான பரிசோதனை கருவிகள் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
பொரளை மருத்துவ பரிசோதனை நிறுவனம் மற்றும் கண்டி பொது வைத்தியசாலைக்கு நாளை (08) உரிய பரிசோதனை கருவிகள் வழங்கப்படும் என வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டார்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரை அடையாளம் காணும் திறன் இலங்கைக்கு உள்ளது. அதற்கேற்ப அந்த கருவிகளை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு உரிய முறையில் வழங்குவோம் என்றார்.
#SriLankaNews
Leave a comment