24 66a4b6970d838
இலங்கைசெய்திகள்

யாழில் திட்டமிட்டு நடைபெறும் பணமோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

யாழில் திட்டமிட்டு நடைபெறும் பணமோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பிரபல வர்த்தகர்களை இலக்கு வைத்து இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், யாழ் மாவட்டத்தின் சில பகுதியிலுள்ள வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் ஊடாக இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு நிறுவகத்தில் இருந்து அழைப்பை ஏற்படுத்துவதாக தம்மை அடையாளப்படுத்தும் மோசடியாளர்கள், நீங்கள் உங்களது தொலைபேசி கட்டணங்களை சிறந்த முறையில் செலுத்துவதன் காரணத்தால் உங்களுக்கு பரிசு வழங்கப்படவுள்ளமையினால் அதற்காக உங்கள் அடையாள அட்டை இல மற்றும் வங்கிக் கணக்கு இலக்கம் என்பனவற்றினை தருமாறும் கோருகின்றனர்.

இத்தரவுகள் வர்த்தகர்களினால் வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (OTP) இலக்கம் வங்கியின் பெயரிலேயே அனுப்பப்படுவதாகும் மற்றும் சிலருக்கு வங்கிக்கு பணம் அனுப்பியது போன்று வங்கியின் பிரத்தியேக செயலிக்கே தரவுகள் அனுப்பப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மீள் அழைப்பெடுக்கும் மர்மநபர்கள் அவ் குறித்த இலக்கங்களினை கோருவதாக சுட்டிக்காட்டிய வர்த்தகர்கள் தாம் சந்தேகமடைந்து அந்த இலக்கத்தை மீளத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர் அத்தோடு இவ்வாறான மோசடியால் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள காவல் நிலையங்களில் அறிவிக்குமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...