24 666140b3d7324
இலங்கைசெய்திகள்

மோடியின் வெற்றியால் இந்தியாவிற்கு அடிமையாகும் இலங்கை

Share

மோடியின் வெற்றியால் இந்தியாவிற்கு அடிமையாகும் இலங்கை

நடந்து முடிந்த இந்திய (India) நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இலங்கையை (Sri Lanka) மேலும் அடிமை நாடாக மாற்றவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் (08) மூன்றாவது தடவையாக பிரதமராக நரேந்திர மோடி (Narendra Modi) பதவியேற்கவுள்ளார்.

நரேந்திர மோடியின் பதவி நீடிப்பு இலங்கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவின் கலாநிதி அதுலசிறி சமரகோன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சமகாலத்தில் இலங்கை மீது இந்தியா செலுத்தும் அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டுக்குள் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) இதுவரை இணைந்து செயற்பட்டுள்ளதுடன் இந்தக் காலப்பகுதி இலங்கையின் பொருளாதாரம் இந்தியாவின் ஆதிக்கத்திற்குள் சிக்கியுள்ளது.

அத்தோடு, இலங்கையின் முதலீட்டு வலையமைப்புகள் பல இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு திருகோணமலை (Trincomalee) எண்ணெய் குதம் உட்பட பல்வேறு முதலீடுகள் இந்தியாவின் கைகளில் உள்ளதோடு இந்த நிலைமையே எதிர்காலத்திலும் தொடரும்.

இதனடிப்படையில், இது பொருளாதார ரீதியில் இலங்கையில் மிக்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...