24 66611ff47299e
இலங்கைசெய்திகள்

சென்னை – கொழும்பு விமான சேவைகள் இரத்து

Share

சென்னை – கொழும்பு விமான சேவைகள் இரத்து

ஒரே நாளில் சென்னைக்கும் (chennai) கொழும்பு கட்டுநாயக்கவுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் 4 விமான சேவைகள் முழுமையமாக இரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமானத்தில் பயணிக்க போதிய பயணிகளின் இல்லாத காரணத்தினாலேயே விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பில் (colombo) இருந்து, சென்னை விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை 2.10 மணி மற்றும் மாலை 3.05 மணியளவில் 2 சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் சேவைகளில் ஈடுபடவிருந்தன.

அத்துடன், சென்னை விமான நிலையத்தில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்புக்கு அதிகாலை 3.10 மணி மற்றும் மாலை 4.10 மணியளவில் இரண்டு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமானங்கள் சேவைகளும் போதிய பயணிகள் வருகை இல்லாமல் ரத்து செய்யப்பட்டன.

தற்போது கோடை விடுமுறை முடிந்துவிட்ட நிலையில், இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளமையும் இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...