புதிய அமைச்சரவை நியமனத்தின்போது, அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இந்த தகவலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதில் தேசிய அமைப்பாளராக செயற்படும் நாமல் ராஜபக்ச, கட்சி மாநாட்டின்போது தேசிய அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார்.
இதன்படி கட்சியை பலப்படுத்தும் பொறுப்பு நாமலிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அந்த பணியை முழுமையாக முன்னெடுப்பதற்காகவே நாமல் ராஜபக்ச அமைச்சு பதவியை ஏற்கமாட்டார் என தெரியவருகின்றது.
#SriLankaNews
Leave a comment