tamilnih 80 scaled
இலங்கைசெய்திகள்

அமைச்சர்களின் வீடுகளில் கோடிக்கணக்கில் நிலுவையில் நீர் கட்டணம்

Share

பதினொரு அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான குடிநீர் இணைப்புகளுக்கு கிட்டதட்ட 46 இலட்சம் ரூபாய் நீர்க்கட்டணம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, காலி மாநகர சபையில் இரண்டு சட்டவிரோத நீர் இணைப்புகள் தொடர்பில் 19 வருடங்களாக 17 இலட்சம் ரூபா செலுத்தப்படவில்லை என்பதுடன் கொழும்பு மாநகர சபையில் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் மூன்று கோடி ரூபா கட்டணம் தற்போது வரை செலுத்தப்படவில்லை என்றும் தேசிய கணக்காய்வுத் திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டின் டிசம்பர் 31ஆம் திகதி வரை வர்த்தகர்கள் மற்றும் பிற கடனாளிகளின் 118 கோடி ரூபாய் கடன் நிலுவை தீர்க்கப்படாமல் இருப்பதாக குறித்த அறிக்கை கூறுகிறது.

மேலும் ஒரு கோடியே எழுபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான கடன் மற்றும் முன்பணத்தை வசூலிக்காமல் 90 வீதத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டுள்ள விடயமும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

அதே போன்று நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவருக்கு திறைசேரியின் அனுமதியின்றி மூன்று வாகனங்களும், மற்றும் முன்னாள் துணைத் தலைவருக்கு இரண்டு வாகனங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக திறைசேரியின் அனுமதியின்றி மாதாந்தம் 150 லீற்றர் எரிபொருளுக்கு மேலதிகமாக சபையின் முன்னாள் தலைவர் மற்றும் உப தலைவருக்கு 60,000 ரூபா எரிபொருள் முற்பணம் செலுத்தப்பட்டதாகவும் தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Missing Persons Nuwara Eliya
இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச்...

Displaced
இலங்கை

நுவரெலியாவில் தொடரும் கனமழை – தற்காலிக முகாம்களில் தஞ்சம் கோரிய மக்கள்.

நுவரெலியாவில் சீரற்ற வானிலை காரணமாக, பல தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக...

Ministry of Defence
இலங்கை

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அவசர அறிவித்தல்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு...

Electricity bills
இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித...