நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எனவே, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டவும்.” – இவ்வாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல எம்.பி., இந்த கோரிக்கையை விடுத்தார்.
அத்துடன், அந்திய செலாவணிக் கையிருப்பு எவ்வாறு குறைந்தது மற்றும் வருமான வழிமுறைகள் எவ்வாறு முடங்கின என்பன குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
#SrilankaNews