களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தனக்கு தொடர்பிருக்கின்றது என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், அமைச்சு பதவியை துறப்பதற்கு தயார் – என்று இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மேற்படி சம்பவம் தொடர்பில் இன்று காலைதான் எனக்கு தெரியவந்தது. இதற்காக தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவரும் இச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார். எனவே, இவ் விடயம் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் நான் பின்நிற்க மாட்டேன்.
இச் சம்பவத்துடன் எனக்கு தொடர்பிருக்கின்றது என சிலர் கூறுகின்றனர். அதனை நிரூபித்தால் நான் அமைச்சு பதவியில் இருந்து விலகுவேன்.
இது தொடர்பில் நியாயமான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment