Keethiswaran
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீட்டில் உள்ள நோயாளர்களுக்கான மருத்துவ சேவை!

Share

யாழ் மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் வரும் 18 ஆம் திகதி முதல் வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ பராமரிப்பு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து செல்லும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இவ்வாறு, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இத்திட்டமானது பருத்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகள் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்விசேட பராமரிப்பு தேவையானவர்கள் தமக்கு அருகில் உள்ள மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றிற்குரிய கீழே வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 4.00 வரை அழைப்பதன் மூலம் தமக்கு வழங்கப்பட வேண்டிய பராமரிப்பினை முன்பதிவு செய்ய வேண்டும்.

அதன் பின் அவ் வைத்தியசாலையில் இருந்து மருத்துவ பராமரிப்பு குழுவினர் நோயாளியின் வீட்டிற்கு வருகை தந்து அவர்களுடைய நோய் நிலைமையை ஆராய்ந்து வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பினை வழங்குவார்கள்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை – 021 226 3262
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை – 021 205 9227
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை – 021 227 1150
ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை – 021 221 1660

இச்சேவை மூலம் அவசர மருத்துவ சேவைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.

இச்சேவை மூலம் அவசர தேவைகள் அற்ற பராமரிப்பு மட்டுமே வழங்கப்படும்.

உதாரணமாக – உணவு வழங்கும் குழாய், சிறுநீர் குழாய் மாற்றுதல், மருந்து கட்டுதல், வீட்டில் வழங்கக்கூடிய இயன் மருத்துவ சேவைகள் போன்றவை) அவ்வாறு அந்நோயாளிகளுக்கு அவசர மருத்துவ தேவைகள் ஏற்படின் 1990 அவசர அம்புலன்ஸ் சேவையை அழைப்பதன் மூலம் வைத்தியசாலைக்கு செல்ல முடியும்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ticket scaled 1
செய்திகள்இலங்கை

பேருந்துப் பயணங்களுக்கு இலத்திரனியல் அட்டை கட்டணம்: திட்டம் நாளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!

பேருந்துப் பயணங்களுக்கான இலத்திரனியல் அட்டை கட்டண முறையை (Electronic Card Payment) அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை...

images 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்கிரமசிங்க நிதி மோசடி வழக்கு: பிரித்தானியாவில் வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணைத் தீவிரம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரித்தானியப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம்...

articles2FLLGAKqVNikCDu5b4YOPa
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

images 2 1
இலங்கைசெய்திகள்

ஜீவன் தொண்டமானுக்கு இன்று திருப்பத்தூரில் திருமணம்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின்...