sajith
இலங்கைசெய்திகள்

புத்தாண்டு மக்களிடையே நம்பிக்கையை மேம்படுத்தட்டும் – எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

Share

தமிழ், சிங்கள புத்தாண்டு சமூக உறவுகளை மேம்படுத்துவதற்கும் பழைய பழக்கவழக்கங்களைத் தொடரவும், ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும் உதவும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு வாழ்த்துச் செயதியிலேயே எதிர்க்கட்சித் தலைவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தை கொண்டிருந்த நம் நாடு, தற்போது கண்ணீர் வடிக்கும் நாடாக மாறியதோடு, புத்தாண்டை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் கொண்டாடும் வாய்ப்பு கூட பல ஆண்டுகளாக இல்லாமல் போய்விட்டது.எமது நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைமைகளுக்கு அசாதாரணமான சவால்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த இருள் சூழ்ந்த காலம் முடிந்து,நமது நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களும் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் வளமான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக உறுதியுடன் அணிதிரள்வதற்கான வலிமையைப் பெற பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...