செய்திகள்இந்தியாஇலங்கை

டக்லஸை கண்டுகொள்ளாத மீனவர்கள்! – போராட்டத்தால் அதிர்ந்த மருதங்கேணி பிரதேச செயலகம்

20220201 091803 scaled
Share

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மீனவர்கள் இன்று காலை 7.30 மணியளவில் முற்றுகைப் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க கோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மருதங்கேணி பிரதேச செயலகத்தின் இரண்டு வாசல்களையும் முடக்கி பிரதான வீதியில் அமர்ந்திருந்த மீனவர்கள்,எமது கடற்பரப்பு இந்தியாவுக்கு விற்கப்பட்டதா, உயிரை குடிக்கும் இந்திய படகை தடுத்து நிறுத்து, இந்திய படகுகளுக்கு நாங்கள் இரையா,வலை வீச உயிர் பயம் என்ன செய்வோம்,எமது கடல் எமக்கு வேண்டும்,கடற்றொழில் அமைச்சே திரும்பிப்பார், மீனவர்களை கொல்லாதே போன்ற கோஷங்களையும் எழுப்பினர்.

சிலமணி நேரங்களின் பின்னர் அங்கு வருகைதந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றினார்.

20220201 093545

அவர் கருத்து தெரிவிக்கையில், இந்திய மீன்பிடிப் படகுகளின் வருகையை தடுப்பதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளருக்கு நஷ்டஈடு வழங்குவது சம்பந்தமாக விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது இலங்கைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய படகுகளை கைது செய்வது தொடர்பிலும் அவ்வாறு அதனை மீறி வருகை தந்தால் அவற்றை இலங்கை மீனவர்கள் பிடிப்பதற்கு அனுமதி கொடுக்க எழுத்து மூலம் அனுமதி தரவேண்டும் என அமைச்சர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் போராட்டகாரர் ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

நான் வாயால் சொல்லும் வாக்குறுதியும் எழுத்தில் தரும் வாக்குறுதியும் ஒன்றுதான். அதனால் எனது வாக்குறுதியை நம்புங்கள் என கூறியபோது அதனை போராட்டக்காரர்கள் ஏற்க மறுக்கவே அங்கிருந்து கடற்றொழில் அமைச்சர் வெளியேறிச் சென்றார்.

இதனையடுத்து உயிரிழந்த இருவரின் இறுதிச் சடங்கையும் மேற்கொள்ளும் பொருட்டு தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாகவும் நீதி கிடைக்காவிட்டால் தொடர்ந்தும் போராடுவோமெனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

போராட்டம் காரணமாக மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முடியாமல் வெளியில் காத்திருந்ததுடன், அப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...