tamilni 406 scaled
இலங்கைசெய்திகள்

யாழிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவருக்கு துயரம்

Share

யாழிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவருக்கு துயரம்

வெளிநாடொன்றில் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக கோமாவில் இருந்தவர் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் (வயது 55) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் 2014ஆம் ஆண்டு டுபாய் – அபுதாபிக்கு சென்று அங்கு வேலை செய்து வந்த நிலையில் கடந்த 10.08.2022 அன்று மூன்று மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்து படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

இவர் கடந்த 17.11.2023 அன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...