யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
குருநகர் பகுதியைச் சேர்ந்த இந்நபர், தென்னாபிரிக்காவிலிருந்து அண்மையிலேயே யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த ஒரு மாதத்தில் யாழ்.போதனா மருத்துவமனையில் இனங்காணப்பட்ட மூன்றாவது மலேரியா நோயாளி இவராவார்.
முன்னதாக, மல்லாகம் மற்றும் ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் மலேரியாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment