கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர் ஸ்தானிகராலயத்துக்கு இன்று சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
உயர்ஸ்தானிகராலயத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் வரவேற்றார்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுப் புத்தகத்தில் அனுதாபக் குறிப்பை எழுதிய ஜனாதிபதி, ஏழு தசாப்தங்களாக இரண்டாம் எலிசபெத் மகாராணி, உலக மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய சேவையை நினைவுபடுத்தினார்.
#SriLankaNews
Leave a comment