1605415571 namal 2
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்தவை விலகக் கோர எவருக்கும் அருகதை இல்லை! – நாமல் பதிலடி

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோருவதற்கு எவருக்கும் அருகதை இல்லை என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், அவர் தலைமையிலான அமைச்சரவையும் உடன் பதவி விலகி சர்வகட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வழிவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும எம்.பி. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச எம்.பி. கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் நெருக்கடி நிலைமைக்குப் பதவி விலகல் தீர்வு அல்ல. கட்சி வேறுபாடின்றி அனைவரினதும் ஒத்துழைப்புத்தான் மிகவும் அவசியம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோருவதற்கு எவருக்கும் அருகதை இல்லை. அவர் மக்கள் மனதை வென்ற தலைவர்.

தற்போதைய புதிய அமைச்சர்களையும், இராஜாங்க அமைச்சர்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே நியமித்தார். எனவே, புதிய அமைச்சரவை தொடர்பில் ஜனாதிபதிதான் தீர்மானம் எடுக்கவேண்டும்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்குடன் எமது கட்சிக்குள் இருந்தும் வெளியில் இருந்தும் சிலர் செயற்படுகின்றனர். அவர்கள் தொடர்பில் நாம் மிகவும் அவதானமாக இருக்கின்றோம்.

நிலையான அரசு அமைய ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...