டலஸ் மஹிந்த
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி விலகுவதைத் தவிர மஹிந்தவுக்கு வேறு வழியில்லை! – டலஸ் சாட்டையடி

Share

“பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.”

– இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய சகாவுமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பிரதமர் பதவியில் தான் தொடர்ந்து நீடிப்பார் என்றும், இடைக்கால அரசு அமைந்தால்கூட அதுவும் தனது தலைமையிலேயே மலரும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அரசியல் மற்றும் கட்சி வரலாறு தெரியாத ஒரு சிலரே தன்னைப் பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு கூறி வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்தக் கருத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கருத்துத் தெரிவிக்கும்போது,

“பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளால் நாடு பேரவலத்தைச் சந்தித்துள்ளது. எனவே, பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், அவர் தலைமையிலான அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலகி அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடன் இடைக்கால அரசு அமைய வழிவிட வேண்டும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. எனவே, பழுத்த அரசியல்வாதியான அவர் எமது கோரிக்கையை ஏற்பார் என்று இன்னமும் நம்புகின்றோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...