5 2
இலங்கைசெய்திகள்

சந்தேக நபர்களை விலங்குகள் போன்று நடத்தவேண்டாம் : சிறை அதிகாரிகளுக்கு நீதவான் கண்டனம்

Share

சந்தேக நபர்களை விலங்குகள் போன்று நடத்தவேண்டாம் : சிறை அதிகாரிகளுக்கு நீதவான் கண்டனம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விலங்குகள் போன்று நடத்த வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு(colombo) மேலதிக நீதவான் பசான் அமரசேன இன்று(02) ஆலோசனை வழங்கியதுடன், திறந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் போது அவர்களை சங்கிலியால் பிணைக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தடுப்புக் காவலில் உள்ளவர்களும் மனிதர்கள் என்றும், அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படத் தகுதியானவர்கள் என்றும் அவர் அதிகாரிகளுக்கு நினைவூட்டினார்.

நீதிமன்ற அறைக்குள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சந்தேகநபர்கள் குழுவொன்றை அவதானித்த பின்னர் மேலதிக நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சந்தேக நபர்களை விலங்குகள் போல் சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்கள் மனிதர்கள், கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்” என்று திறந்த நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...