புலிகளின் தலைவர் பிரபாகரன் படிப்பறிவு இல்லாதவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அமைப்பில் ஆரம்பத்தில் இருந்தவர்களுக்கு அவ்வளவாக படிப்பறிவு இல்லை என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தனி இராஜ்ஜியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.
பின்னர் இந்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. இதனாலேயே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
அத்துடன் நாட்டை கைவிட்டு வெளிநாடுக்குச் சென்றவர் தான் அன்டன் பாலசிங்கம். அவர் பிரிட்டனில் ஒரு தாதியரையே திருமணம் செய்திருந்தார். பாலசிங்கம் கூட படிப்பறிவை கொண்டிருந்தாரா என்பது எனக்கு சந்தேகம என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment