25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

Share

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம் மற்றும் தனிநபர் வாழ்க்கை தொடர்பாக அறிவித்த புதிய அபராத விதிமுறைகள் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

கிராமக் குழுவினால் தன்னிச்சையாக வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பில் மாகாணத்திற்கு வெளியே உள்ள ஒருவரைத் திருமணம் செய்தால் 1,500 யுவான் அபராதம்.

திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதிகளுக்கு ஆண்டுதோறும் 500 யுவான் அபராதம். திருமணத்திற்கு முன் கருவுற்றால் அல்லது திருமணமான 10 மாதங்களுக்குள் குழந்தை பிறந்தால் 3,000 யுவான் அபராதம்.

தம்பதியினர் சண்டையிட்டு, அதனைத் தீர்க்க கிராம அதிகாரிகள் தலையிட்டால் தலா 500 யுவான் அபராதம். மது அருந்தி ரகளையில் ஈடுபட்டால் 5,000 யுவான் வரையிலும், வதந்திகளைப் பரப்பினால் 1,000 யுவான் வரையிலும் அபராதம்.

இந்த வினோத சட்டங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானதை அடுத்து, மெங்டிங் (Mengding) நகர அரசாங்கம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது:

இந்த அறிவிப்பு மிகவும் “அசாதாரணமானது” என்றும், மேலிடத்தின் அனுமதியின்றி கிராமக் குழு தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அந்த அபராத அறிவிப்புப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்தச் சட்டவிரோத அறிவிப்பை வெளியிட்டவர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தனிநபர் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலான இத்தகைய விதிமுறைகளை ஒருபோதும் ஏற்க முடியாது எனச் சீன சமூக வலைத்தளப் பயனாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...