Photo 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

LTTE குமார் கைது!

Share

LTTE குமார் என்றழைக்கப்படும் கொள்ளையர் கொழும்பு, ராஜகிரிய பகுதியில் பதுங்கியிருந்த வேளை அட்டன் பொலிஸின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நாட்டில் பல பகுதிகளுக்குச்சென்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் – செனன் பகுதியில் உள்ள தோட்ட அதிகாரியொருவரின் வீட்டில் அண்மையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது, கொள்ளையடிக்கப்பட்ட தொலைபேசி கொழும்பில் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

அந்நபரிடம் சந்தேக நபரின் தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்று இருந்துள்ளது. அதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போதே சந்தேக நபர் இராஜகிரிய பகுதியில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

இவர் பல பெண்களுடன் தொடர்பை பேணி வந்துள்ளார். அவர்களின் வீடுகளுக்குச் சென்று தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளையடித்து வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதானவரிடமிருந்து தங்க நகை, தொலைபேசி உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Photo 4

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...