நாட்டில் எதிர்வரும் 9 ஆம் திகதி அவசரகால சட்டத்தையோ அல்லது அவசரகால நிலையையோ பிரகடனப்படுத்துவது தொடர்பில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலிறுத்தியும் நாளை மறுதினம் 9 ஆம் திகதி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
எனவே, சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவும், அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுப்பதற்காகவும் நாட்டில் அவசரகாலச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அவ்வாறானதொரு முடிவை அரசு இன்னும் எடுக்கவில்லை எனவும், சூழ்நிலைக்கேற்ப முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SriLankaNews
Leave a comment