election
அரசியல்இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – நிதி அமைச்சுடன் பேச்சுக்கு அழைப்பு

Share
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தமது ஆணைக்குழுவால் கோரப்பட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவை அழைப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தீர்மானித்துள்ளது.மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்டவாறு எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தாமதமடையும் என்றும்  எதிர்வரும் சில நாட்களுக்குள் திட்டமிடப்பட்டபடி தபால் வாக்குச்சீட்டுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தபால் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்றையதினம் (15) முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதும்  நிதி கிடைக்காமை காரணமாக தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிப்பதில் தடைகள் ஏற்பட்டதாக அரசாங்க அச்சு திணைக்களம் தெரிவித்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அரசாங்க அச்சகத்துடன் ஆணைக்குழு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது.

அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள், ஏனைய ஆவணங்கள் மற்றும் தேர்தலை விரைவாக நடத்துவதற்குத் தேவையான பொருட்களை அரசாங்க அச்சுத் திணைக்களம் வெளியிடுவதன் முக்கியத்துவத்தை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமையால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது என்று செவ்வாய்க்கிழமை (14) ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....