எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்யும் போது டொலர்களை செலுத்தி எரிவாயுவை ஓடர் செய்யும் முறை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வெளிநாடுகளில் இருப்பவர்கள் டொலர்களை செலுத்தி இலங்கையில் எரிவாயுவை ஓடர் செய்து தமது நண்பர்கள் உறவினர்களுக்கு வழங்க முடியும். இதற்கான கட்டணம் 15 டொலர்கள் என அவர் குறிப்பிடுகிறார்.
இதன்மூலம் நிறுவனத்திற்குத் தேவையான டொலர்களை கையிருப்பில் வைத்திருக்க முடியும் என அவர் மேலும் கூறினார்.
#SriLankaNews
Leave a comment