Gomagan
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கைதிகளின் விடுதலையை வேண்டி விடுதலைப் பொங்கல்!-

Share

உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடவிருக்கின்ற வேளையிலே, தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இரத்தக்கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல் நாளை காலை 10 மணிக்கு முற்றவெளியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் பொங்கலுக்கு மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொள்ளுங்கள் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் அழைப்பு விடுத்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் கைதிகளின் உறவுகள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். கடந்த காலத்தில் ஒருசில அரசியல்கைதிகள் விடுவிக்கப்பட்டு அவை பெரியளவில் காட்டப்பட்டன. ஆனால் அதற்குப் பின்னர் எதுவும் நடக்கவில்லை .

கடந்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை புதிய ஆண்டிலாவது இடம்பெற வேண்டும் என்றார்.


#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...